யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…. 2026 தேர்தலுக்கு மெகா பிளான் போடும் EPS…. அனல் பறக்கும் அரசியல் களம்….!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஈபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வரும் நிலையில் இபிஎஸ் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களை பரிந்துரை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய அறிவுறுத்தல்களை இபிஎஸ் வழங்கியுள்ளார். அதேபோல ஜனவரி மாதத்திற்குள் மெகா கூட்டணி அமைக்க மாபெரும் திட்டம் இருப்பதாகவும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உறுதி அளித்துள்ளார்.