நேற்று சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி வைக்க என்ன காரணம் என்று தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதா மறைந்த போது, சிலர் ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான். அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது.
நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய EPS நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாஜக எந்தவொரு தொந்தரவும் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
