தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளில் தற்போதே தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் வேகமாக மாறியுள்ளது. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் எம்.எல்.ஏ.க்களையும் தன் பக்கம் இழுத்தது. இதில் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாலும், முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியோடும் சேர்த்து மொத்தம் ஐந்து தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
இந்த இடைத்தேர்தலை ஒரு சாதாரண போட்டியாகக் கருதாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கும் ஒரு கௌரவப் பிரச்சினையாக அதிமுக தலைமை பார்க்கிறது. கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றி, தங்களின் அரசியல் பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். தவெக தலைமையிலான தற்போதைய ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாறக்கூடும் என்றும், ஆளுங்கட்சி தனது எண்ணிக்கையைத் தக்கவைக்கவே தங்களை உடைத்ததாகவும் அதிமுக மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க இந்த தேர்தல் அவர்களுக்கு மிக முக்கிய ஒன்றாக மாறியுள்ளது.
முதல்கட்டமாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தின் பெருந்துறை மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உள்ளூர் அளவில் நல்ல அறிமுகம் கொண்டவர்கள், பொருளாதார ரீதியாக வலுவானவர்கள் மற்றும் கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்தவர்கள் என சுமார் ஆறு பேரின் பெயர்கள் அடங்கிய உத்தேசப் பட்டியல் எடப்பாடி பழனிசாமியின் கையில் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதிக்கு மிக வலுவான, நட்சத்திர வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி தவெகவுக்குக் கடுமையான சவால் கொடுக்கவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், தற்போதைய அரசியல் நெருக்கடிகளைக் கையாளுவதற்குக் கூட்டணி கட்சிகளுக்கு வளைந்து கொடுக்கவும் அதிமுக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில் பாமக கேட்டபோதிலும் தராமல் அடம் பிடித்த மதுராந்தகம் தொகுதியை, இந்த முறை பாமகவுக்கு ஒதுக்கவும், அதேபோல் அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும் உடனடியாக வீடு வீடாகச் சென்று பிரசாரம், வாக்காளர் தொடர்பு போன்ற பணிகளைத் தொடங்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே எடப்பாடி பழனிசாமி காட்டும் இந்த வேகம், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான முதல் அரசியல் பலப்பரீட்சையில் அதிமுகவை தற்போதைக்கு முன்னிலையில் நிறுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…