திடீர் திருப்பம்…. அதிமுகவுடன் கூட்டணி சேரும் புதிய கட்சி… செம குஷியில் இபிஎஸ்….!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என்று கூறிக் கொண்டிருக்க அது எப்படி சாத்தியமாகும் என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக தான் உள்ளது.

இருந்தாலும் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கரூர் துயரத்தால் முடங்கி இருக்கும் விஜய் இடம் இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் ஆறாம் தேதி இருவரும் அரை மணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகவும் ஜனவரிக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் இபிஎஸ்ஐ சந்திக்க விஜய் ஓகே சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கரூர் விஷயத்தில் முழு ஆதரவு அளிப்பதாக விஜய் இடம் ஈபிஎஸ் கூறியதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.