திருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார். “இன்னும் மூன்று அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டத் தயாராகிவிட்டனர்.
திமுக அரசின் மக்கள் விரோதப் போக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். தற்போது நிலவும் அரசியல் சூழலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியில் அமரும் எனத் தொண்டர்கள் மத்தியில் அவர் சபதம் ஏற்றார். கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது மத்திய ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த “3 அமாவாசை” காலக்கெடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
