“நான்தான் அடுத்த CM”… திமுக – EPS இடையே ரகசிய டீல்?… புதுச்சேரி ரிசார்ட்டில் EPS போட்ட ரகசிய பிளான்… கொதிக்கும் அரசியல் களம்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

எதிர்க்கட்சியாக இருக்கும்போதே எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ரகசியக் கூட்டு வைத்திருந்தார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கடந்த காலங்களில் வெறும் 47 சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்வசம் வைத்துக்கொண்டு, தானே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று ஈபிஎஸ் கூறி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசியதாக அவரது சொந்தக் கட்சியினரே தெரிவித்ததாகவும் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். அந்த இக்கட்டான காலகட்டத்தில்தான், எப்படியாவது திமுகவுடன் கைகோர்த்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் ஈபிஎஸ் செயல்பட்டு வந்தார் என்பதை அவரது இந்த ரகசியத் திட்டம் வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அமைச்சர் செங்கோட்டையன் மேலும் தெரிவித்துள்ளார்.