கருத்து வேறுபாடு காரணமாக பிளவு பட்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். பாஜகவின் தமிழக அரசியல் பயணம் என்பது சற்று சறுக்கல் நிறைந்ததாக இருக்கின்றது. திராவிட கொள்கைகளால் தமிழகம் சூழப்பட்டிருக்கும் சூழ்நிலையில் பாஜகவின் கொள்கை முரண்பட்டதாகவே உள்ளது.
இருந்தாலும் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி தற்போது பலமாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் சேர்ந்து சந்திக்க பாமக முடிவு செய்துள்ள நிலையில் இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இபிஎஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர். அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கின்றார். அங்கு அமித்ஷா, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க உள்ளாராம். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் கூட்டணியில் பாஜகவுக்கான இடங்கள், தொகுதிகள், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைப்பு குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…