ரஜினி இல்லாமல் அரசியலில் இறங்காதீங்க…. தனுஷுக்கு டெல்லி பாஜக போட்ட கண்டிஷன்…. அரசியலில் அதிரடி திருப்பம்..!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் ஆகியோரைச் சந்தித்து தனுஷ் ஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது, ரஜினிகாந்தின் நேரடி ஆதரவு இல்லாமல் தமிழக அரசியலில் கால் பதிப்பது சவாலானது என்றும், தற்போதைய அரசியல் சூழலில் முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்ய ரஜினியின் பலம் அவசியம் என்றும் பாஜக தரப்பில் தனுஷிடம் அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜினியின் ஆதரவைப் பெற முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் தனுஷிடம் பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.