“எனக்கு சரக்கு தர மாட்டியா..?” அரிவாளுடன் நடுரோட்டில் அட்டகாசம்… பீதியில் தெறித்து ஓடிய மக்கள்…!!

By Soundarya on தை 18, 2026

Spread the love
பெங்களூரு அருகே உள்ள அனேகல் தாலுகாவின் கௌரென்ஹள்ளி கிராமத்தில், மது போதையில் நபர் ஒருவர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பசவராஜ் என்பவர், பிரகாஷ் என்பவரிடம் மது கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த பசவராஜ் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்றவர், கையில் ஒரு பெரிய அரிவாளுடன் கிராமத்திற்குள் மீண்டும் நுழைந்தார்.

முற்றிலும் போதையில் இருந்த பசவராஜ், அரிவாளை வீசி அவ்வழியாகச் சென்ற பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிரட்டி பீதியை ஏற்படுத்தினார். இதனால் அச்சமடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனேகல் காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட பசவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.