“அமெரிக்காவுக்கு ‘நோ’ சொன்ன பிரித்தானியா”… மூன்றாம் உலகப்போர் அபாயமா?… ஈரானை தாக்கத் தளம் தர மறுத்த இங்கிலாந்து… ட்ரம்ப் – கீர் ஸ்டார்மர் இடையே வெடித்த மோதல்…!!!

By Rajeshwari on பங்குனி 8, 2026

Spread the love

ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்குத் தனது கட்டுப்பாட்டில் உள்ள தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்குப் பிரித்தானியா அனுமதி மறுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள டியேகோ கார்சியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஆர்.ஏ.எப் ஃபேர்ஃபோர்ட் ஆகிய முக்கிய தளங்களைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையைப் பிரதமர் கீர் ஸ்டார்மர் நிராகரித்துள்ளார்.

மேலும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அல்லது அரசு இலக்குகள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அத்தகைய நடவடிக்கைக்குத் துணை போவது சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் பிரித்தானிய அரசு கருதுகிறது. இந்த முடிவால் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே இராஜதந்திர ரீதியான விரிசல் ஏற்பட்டுள்ளது.

   

இதனால் பிரித்தானியாவின் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ள அதிபர் ட்ரம்ப், இது ஒரு மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார். மேலும், டியேகோ கார்சியா தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் முடிவையும் அவர் தற்போது கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

   

இந்நிலையில் எவ்வாறாயினும், தனது பிராந்தியத்தில் உள்ள குடிமக்களையும் நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பிரித்தானியா முன்னுரிமை அளிக்கும் என்றும், தேவையற்ற போரில் தங்களை இணைத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் லண்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.