பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

Spread the love

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். உயிரிழப்பதற்கு முன் அவர் பதிவு செய்த உருக்கமான வீடியோவில், “நான் இறப்பதற்கான நேரம் இதுவல்ல. என் மனைவியின் கொடுமைகள் என்னை உடைத்துவிட்டன. வாழ்க்கையில் நான் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன். என் பெற்றோர் இதனால் தவிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஜூன் 2 அன்று அர்பிதா யாதவ் என்பவரைத் திருமணம் செய்த இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்குப் பின் வெறும் 3 மாதங்களே கணவர் வீட்டில் வாழ்ந்த அர்பிதா, பின்னர் பிரத்யும்ன் வேலை பார்த்த டெல்லிக்குச் சென்றார். அங்கு ஒருமுறை அவர் பிரத்யும்னின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும், அதன் பிறகு தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அர்பிதா, பிரத்யும்ன் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் பராமரிப்புத் தொகை கோரி பொய் வழக்குகளைத் தொடர்ந்தார். இதனால் கடந்த 6 ஆண்டுகளாக நீதிமன்றத் வாய்தாக்களுக்கு அலைந்து, கடுமையான மன உளைச்சலில் பிரத்யும்ன் வாழ்ந்து வந்துள்ளார். நீதிமன்றத் தேதிகளுக்காகத் தனது அலுவலகத்தில் அவர் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. கடந்த மே 12 அன்று பத்ரௌனா நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில், அடுத்த விசாரணைத் தேதி ஜூலை 21-க்கு மாற்றப்பட்டது. இது அவரது மன அழுத்தத்தை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், இந்தூரில் உள்ள தனது வேலைக்குத் திரும்பும் வழியில், புதியா மாதா கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, குஸ்மி காட்டிற்குள் சென்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வீடியோவை பதிவேற்றிவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

இறப்பதற்கு முன் அவர் பேசிய வீடியோவில், “நான் வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன். என் வலிக்கு என் மனைவியே காரணம். அண்ணே, நம் பெற்றோருக்கு ஒரு மகன் இல்லை என்ற குறையை ஒருபோதும் தெரியவிடாதே. வயதான காலத்தில் மகன் தங்களைக் காப்பாற்றுவான் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பார்கள், ஆனால் நான் அவர்களுக்கு வேதனையைத் தருகிறேன்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இது போன்ற ஒருதலைப்பட்சமான சட்டங்கள் மற்றும் பொய் வழக்குகளால் லட்சக்கணக்கான ஆண்கள் பாதிக்கப்பட்டு, நீதி கிடைக்காமல் தவித்து வருவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

4 minutes ago

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

11 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

17 minutes ago

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

25 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

32 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

56 minutes ago