பீகார் மாநிலத்தில் ஊடகப் பணிகள் துறையில் வினோத் ராய் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அந்த மாநிலத்தில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணி & சாலை சீரமைக்கும் பணி மேலாண்மையை கவனித்து வந்தார். மேலும் இவர் ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், இவர் வீட்டில் சோதனை செய்ய முடிவு செய்தனர்.
தன் வீட்டுக்கு ரைடு வரப்போவதை முன்கூட்டியே அறிந்த வினோத்ராய், தனது மனைவி பப்லி ராயுடன் சேர்ந்து ரூபாய் நோட்டுகளை எரித்து, கழிவறையில் ஊற்றியுள்ளார். கழிவறை நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மேலும் பணத்தை எரிக்க முடியாமல், திகைத்து நின்ற நேரத்தில் அரசு அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்து சோதனை தொடங்கினர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கழிவறையில் எரிந்த நிலையில் இருந்ததை கண்ட அதிகாரிகள், பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து நடத்திய சோதனையில், 40 லட்ச ரூபாய் ரொக்கமும், பாதி எரிந்த நிலையில் 20 லட்சம் பணமும், 100 கோடி மதிப்புள்ளான சொத்து ஆவணங்களும், விலை மதிப்பு மிக்க கடிகாரங்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் போலீசார், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் பணம் எரிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…