தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வரும் வேளையில், தற்போதைய அரசை கவிழ்க்கும் நோக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசி, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக ரூ.35 கோடி வரை ஆசை காட்டப்பட்டதாக அவரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கரூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கொடுத்த தூண்டுதலின் பேரிலேயே தாங்கள் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விசாரணையில் இருந்து தப்பிக்க தலைமறைவான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் வெறும் அரசியல் குதிரை பேரத்தோடு நின்றுவிடாமல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைப் பக்கமும் திரும்பியுள்ளது. தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் பெருமளவில் ஹவாலா பணம் கைமாறியிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக விசாரணையில் இறங்கியுள்ளது. மாநில காவல்துறையின் விசாரணையிலிருந்து தற்காலிகமாக முன்ஜாமீன் மூலம் தப்பிய செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு, மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையின் இந்த அதிரடி என்ட்ரி கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…