தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக நடைபாண்டியில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் மற்றும் வட்டார இயக்க மேலாளரை தொடர்பு கொள்ளலாம். எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், கொத்தனார், ஆரி எம்பிராய்டரி, வாகன ஓட்டுநர் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல் மற்றும் அழகு நிலைய மேலாண்மை உட்பட 30 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
