வங்கியில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு..! டிகிரி முடித்தால் போதும் வேலை நிச்சயம்… விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசி தேதி..!!

By Soundarya on சித்திரை 2, 2026

Spread the love

 பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் (Punjab & Sind Bank) காலியாக உள்ள 1,000 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மொத்த பணியிடங்களில், தமிழகத்திற்கென பிரத்யேகமாக 65 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை (Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

   

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 18 மாதங்கள் வங்கித்துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

   

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

 

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://punjabandsindbank.co.in/ என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.