சென்னையில் , தலைநகரமாக தெற்கு இரயில்வே செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பம், ரயில் இயக்கம், வணிகப்பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் 90,000 மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களில் 50 சதவீதம் இந்திப் பேசும் தொழிலாளர்களே உள்ளனர். வேறு மொழியில் பேசும் ஊழியர்கள் மக்களிடையே தொடர்பு கொள்ள உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். டிக்கெட் கவுண்டர்களில் இந்தி பேசும் ஊழியர்கள் வேலை செய்வதால் டிக்கெட் எடுக்க கூட சிரமமாக உள்ளது என்று தமிழ் பயணிகள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்தியின் பயன்பாட்டு அதிகரிக்க வேண்டும். அதனால் சிறு சிறு குறிப்புகள் கூட அலுவலகத்தில் உள்ளோர் அனைவரும் இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க தெற்கு ரயில்வே துறை தலைவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல் கடிதத்திலும் இந்தி பயன்பாடு இருக்க வேண்டும். ஆய்வுக் கூட்டங்களிலும் இந்தி பயன்பாடு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல், அறிவிப்புகள், ஏற்பு, அனுமதி, முன்மொழிவு இதுபோன்ற வார்த்தைகளை இந்தியில் மட்டுமே குறிப்பிட வேண்டும். ஊழியர்கள் அனைவரும் இதுபோன்ற வார்த்தைகளை கண்டிப்பாக ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
