“ஐயோ என்னை விட்டுடுங்க சார்” ரயிலில் சிதறிய சுண்டல்.. பெண்ணின் சேலையை இழுத்து மல்லுக்கட்டிய ஊழியர்… கொந்தளிக்கும் மக்கள்…!!

By Swetha on வைகாசி 14, 2026

Spread the love

ரயிலில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தி வந்த முதியவர் ஒருவரிடம் ரயில்வே ஊழியர் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் சுண்டல் விற்றுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணின் கூடையில் இருந்த சுண்டல் ரயிலின் இருக்கை மற்றும் தரையில் கொட்டியுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்தச் சூழலில், அங்கிருந்த ரயில்வே பேண்ட்ரி (Pantry) ஊழியர் ஒருவர், அந்த முதியவரிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். அந்தப் பெண் தவறுதலாகச் செய்த பிழைக்காக, ஊழியர் அவர் வைத்திருந்த சுண்டல் பாத்திரத்தைப் பிடுங்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த முதியவர், பயத்தில் தனது பாத்திரத்தை முதுகிற்குப் பின்னால் மறைத்துக்கொண்டு, தயவுசெய்து தனது வாழ்வாதாரத்தைப் பறிக்க வேண்டாம் என்று கைகூப்பி அழுதுகொண்டே கெஞ்சிய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

   

https://www.instagram.com/reel/DYP7HcLSdTR/?utm_source=ig_web_copy_link

   

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த ஊழியரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதியவர் செய்த தவறு சிறியது என்றும், அதற்கு இவ்வளவு கடுமையான முறையில் ஒரு ஏழைப் பெண்ணை மிரட்டுவது முறையற்றது என்றும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். உணவு சிதறியதற்காக அந்தப் பெண்ணை எச்சரித்திருக்கலாமே தவிர, அநாகரீகமாக நடத்துவது மனிதநேயமற்ற செயல் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.