நான் மனுஷனா இல்ல மெஷினா?… அதிகாலை 2.45 மணிக்கு வேலை கொடுத்த நிறுவனம்… தூங்கிய இளம்பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணி ஆசட் அண்டர் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தன்னுடைய மேல் அதிகாரியால் ஏற்பட்ட உச்சகட்ட மன அழுத்தத்தையும் பணி சூழலையும் விவரித்து வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து 14 மணி நேரம் வேலை செய்தும், வார இறுதி நாட்களில் கடுமையாக உழைத்தும், தன்னுடைய ஆன்-சைட் மேல் அதிகாரி அதிகாலை 2.45 மணிக்கு செய்தி அனுப்பி உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்பார்த்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த சமயத்தில் தான் தூங்கியதால் பதில் அளிக்க தவறிய போது அந்த மேல் அதிகாரி புகார் அளித்ததால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. நான் முன்பு வேலையை விரும்பி செய்தேன். ஆனால் இப்போது என் நிம்மதியை இந்த வேலை அழித்துக் கொண்டிருக்கிறது. பயனற்ற மேலாளர் செல்வாக்குள்ள மேலதிகாரிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்தப் பெண் கவலையுடன் பதிவிட்டுள்ளார். தவறு இல்லாத போது மன்னிப்பு கேட்பதன் மூலம் இத்தகைய அத்துமீறிய கட்டுப்பாட்டு சூழலை சாதாரணமாக ஆக்க வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.