பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை மற்றும் முறையற்ற அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் நேரடி சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன. பள்ளி வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பற்ற சூழலில் மாணவிக்கு இழைக்கப்பட்ட இந்தத் தொல்லை குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், சம்மந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
