அம்மாடியோ… மாதம் ரூ 46,000 சம்பளம்?… ஐடி ஊழியர்களை விட… அதிகம் சம்பாதிக்கும் பெண் ஊழியர்… “எங்க அப்ளை பண்ணணும்?”… ஷாக்கில் உறைந்த நெட்டிசென்கள்…!

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

ஸ்னாபிட் என்ற வீட்டு சேவை செயலியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் ஜூலை மாத வருமானக் கணக்கு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அந்தப் பெண் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்த போதிலும், பயிற்சி மற்றும் சீருடைக்கான கட்டணக் கழிவுகளுக்குப் பிறகு ரூ. 46,641 சம்பாதித்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் அவர்களின் ‘சக்தி போனஸ்’ மற்றும் புதிய சேர்க்கைக்கான போனஸ் தொகைகளும் அடங்கியுள்ளன.

இந்த வருமான விவரம் இணையவாசிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் படித்த பட்டதாரிகள் பலரும் தங்களின் தற்போதைய மாதச் சம்பளத்துடன் இதை ஒப்பிட்டு, “இந்த வேலைக்கு எங்கு விண்ணப்பிப்பது?” என்றும், “நாங்கள் தவறான துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டோமா?” என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

   

https://www.instagram.com/reel/DbqhCYLJRMX/?utm_source=ig_web_button_share_sheet

   

அதேவேளையில், இத்தகைய வீட்டுச் சேவைப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு முறையான, கண்ணியமான வருமானம் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பலரும் பாராட்டியுள்ளனர். இருப்பினும், இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிக்கக் கடின உழைப்பும் அதிக நேரமும் தேவைப்படும் என்றும், இது போனஸ் தொகைகள் அடங்கிய விதிவிலக்கான ஒன்றாக இருக்கலாம் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.