கோவை ஒப்பணக்கார வீதியில் முகமது தவ்பிக் என்ற நபருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. அதில் சுரேஷ் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்டதும் மளிகை பொருட்களை லிப்ட் மூலமாக சுரேஸ் எடுத்துச் சென்றுள்ளார். இது பொருட்களை எடுத்துச் செல்லும் லிப்ட் என்பதால் ஆட்கள் யாரும் பயணம் செய்வதற்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் பொருட்களை அனுப்பச் சென்ற சுரேஷ் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை தேடிச் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சுரேஷ் உயிரிழந்து கிடந்தார். பொருட்கள் எடுத்துச் செல்லும் லிப்ட்டும் அருந்து கிடந்துள்ளது. எனவே லிஃப்ட் விழுந்து சுரேஷ் உயிரிழந்ததாக கருதப்படுகிறது. உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
