ஜிபே, போன்பே-விற்கு புதிய போட்டி…! இனி X செயலியில் பணம் அனுப்பலாம்…! எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

முன்பு கூகுள் பே, போன்பே போன்ற குறிப்பிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் மற்றும் அமேசான் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தங்களது செயலிகளிலேயே பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், சமூக வலைதளத் தளமான ட்விட்டரை வாங்கி ‘X’ எனப் பெயர் மாற்றம் செய்துள்ள எலான் மஸ்க், தற்போது அந்தச் செயலி மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த புதிய வசதியின் மூலம், எக்ஸ் செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் இனி மிக எளிதாகப் பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பவும், கட்டணப் பில்களைச் செலுத்தவும் முடியும். சமூக ஊடகத் தளமாக மட்டுமே இருந்த எக்ஸ் செயலியை, மக்களின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஒரே ‘சூப்பர் ஆப்’ ஆக மாற்றுவதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும், அதற்காகவே இந்த அதிரடி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.