சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், அடர்ந்த வனப்பகுதியில் யானை ஒன்று தனது குட்டியுடன் மெதுவாக நடந்து செல்வதைக் காணலாம். அப்போது அங்கு வந்த ஒரு காண்டாமிருகம், திடீரென ஆக்ரோஷமடைந்து யானைக் குட்டியைத் துரத்தத் தொடங்கியது. தனது குட்டி ஆபத்தில் இருப்பதை உணர்ந்த தாய் யானை, அடுத்த நொடியே பெரும் கோபத்துடன் காண்டாமிருகத்தை நோக்கித் திரும்பியது. தாய் யானையின் அந்த ஆக்ரோஷமான பிளிறலும், அது காண்டாமிருகத்தை நோக்கி பாய்ந்து வந்த வேகமும் காண்போரை உறைய வைப்பதாக இருந்தது.
யானையின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு மிரண்டு போன காண்டாமிருகம், பயத்தில் அப்படியே ஓரிடத்தில் நின்றது. குட்டியைக் காக்கத் தாய் யானை காட்டிய அந்த வீரமும், வேகமும் காண்டாமிருகத்தின் ஆட்டத்தை அடக்கிவிட்டது. “தாயின் அன்பிற்கும் துணிச்சலுக்கும் ஈடு இணை ஏதுமில்லை” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தக் காணொளி, இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அந்தத் தாய் யானையின் பாதுகாப்பான அரவணைப்பைப் பாராட்டித் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…