“எங்களுக்கு கரும்புதான் முக்கியம்”…. சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படும். குறிப்பாக, கர்நாடகப் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறித்துக் கரும்புகளைப் பிடுங்கி உண்பதை இப்பகுதி காட்டு யானைகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது.

அப்போது காரப்பள்ளம் வனப்பகுதி சாலையில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை ஒன்று, கரும்பு லாரியைக் கண்டதும் கரும்பை எடுப்பதற்காகச் சாலையை நோக்கி வேகமாக ஓடிவந்தது. அந்த சமயத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்ற சொகுசு கார் ஒன்று யானையின் குறுக்கே சென்றதால் ஆத்திரமடைந்த அந்த யானை, காரை ஆக்ரோஷமாகச் சிறிது தூரம் துரத்தியது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.

   

தொடர்ந்து அந்த கரும்பு லாரியை வழிமறித்து நிறுத்திய யானை, அதிலிருந்த கரும்புக் கட்டுகளை லாவகமாகப் பிடுங்கிச் சுவைத்தது. மேலும், அங்கிருந்த மற்றொரு யானையும் சாலையை முற்றிலுமாக அடைத்துக்கொண்டு கரும்புகளை ருசித்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், நீண்ட நேரத்திற்குப் பிறகே யானைகள் நிதானமாக வனப்பகுதிக்குள் திரும்பின. யானைகள் சாலையை விட்டு அகன்ற பிறகே பிற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

   

https://1newsnation.com/wp-content/uploads/2026/10/WhatsApp-Video-2026-10-20-at-3.33.08-PM.mp4