செம ஸ்கெட்ச்..! ரூ.1 கோடி அபேஸ்… பலே திருடர்கள்… மணி ஹெய்ஸ்ட் பாணியில் துணிகரம்… CCTV-யில் சிக்கிய மர்ம கும்பல்…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

சங்கோதர் அருகேயுள்ள நவாபுரா பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல விநியோக நிறுவனமான ‘இன்கிராம் மைக்ரோ இந்தியா’-வின் சேமிப்புக் கிடங்கில் பெரும் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர் 21 அன்று அதிகாலை நேரத்தில் கிடங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த விலையுயர்ந்த ஆப்பிள் ஐபோன்கள், ஐபேடுகள், நவீன மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட பல மின்னணு உபகரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு தோராயமாக 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சங்கோதர் காவல் நிலையத்தில் நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதிகாலை வேளையில் வெறும் ஒரு மணி நேர இடைவெளிக்குள் திட்டமிட்டு இந்தத் திருட்டு மிக நேர்த்தியாக அரங்கேற்றப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்தக் காட்சிகளை முக்கிய ஆதாரமாகக் கொண்டு, கைவரிசை காட்டிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.