வேலையை காலி பண்ணிய AI… ஐடி ஊழியர்களை விட… அதிகம் சம்பாதிக்கும் எலக்ட்ரீசியன்கள்… அமெரிக்காவை அலறவிடும் புதிய ட்ரெண்ட்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் மென்பொருள் துறையில் கடும் வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், AI தொழில் நுட்பத்தின் இந்த ஆதிக்கம் மனித குலத்திற்கும், குறிப்பாக ஐடி துறை வேலைவாய்ப்புகளுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மற்றொரு புறம், AI இயங்குவதற்குத் தேவையான டேட்டா சென்டர்களின் கட்டமைப்புப் பணிகள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாக, கட்டிடக் கலை மற்றும் தொழில்நுட்பக் உள்கட்டமைப்பில் எலக்ட்ரீசியன் மற்றும் வெல்டர் போன்ற களப்பணியாளர்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெகுவாக அதிகரித்துள்ளது.

   

குறிப்பாக, சிறப்புத் திறன் கொண்ட எலக்ட்ரீசியன்களுக்கு அமெரிக்காவில் இந்திய மதிப்பில் மாதத்திற்கு சுமார் ரூ.22 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இது சாதாரண கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் ஊதியத்தை விட 32 சதவீதம் அதிகம் என்பதுடன், பல ஐடி ஊழியர்களின் வருமானத்தை விடவும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.