தமிழகம் முழுவதும் இனி அனைத்து குடியிருப்புகளிலும் இது கட்டாயம்… அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

தமிழகத்தில் குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, 8 வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர அடி மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். 50 வீடுகளுக்கும் அதிகமான பெரிய குடியிருப்புகளாக இருந்தால் அங்கே வெளியே இருந்து வருவோருக்கும் பயன்படுத்தும் வகையில் பொதுவான ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவது கட்டாயம்.

குடியிருப்புகளைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மின்வாகன சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். 300 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவது கட்டாயமாகும். இந்த விதி திருத்தங்கள் மாநிலத்தில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் வாகன ஓட்டிகளுக்கு தேவையான உள்கட்ட அமைப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.