திடீர் திருப்பம்…. செந்தில் பாலாஜி பதவிக்கு ஆபத்து?…. மாட்டிக்கொண்ட RTI ஆதாரம்… பதறும் திமுக….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்யக்கோரி போலீஸில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியின் எம்.எல்.ஏ தகுதியை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்துள்ள புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.