தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு… லிஸ்டுல உங்க பேரு இல்லையா?… மார்ச் 26-க்குள் இந்த வேலையை முடிக்கலைனா அவ்ளோதான்… இதோ ஈஸியான வழி..!!!

By Rajeshwari on பங்குனி 23, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் விண்ணப்பிக்க மார்ச் 26, 2026 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கடமையாற்ற விரும்பும் பொதுமக்கள் தங்களது பெயர்கள் பட்டியலில் உள்ளனவா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

   

மேலும் பெயர் சேர்க்க விரும்புவோர் ‘படிவம்-6’-ஐ பூர்த்தி செய்து அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். மேலும், பொதுமக்களின் வசதிக்கா என்ற இணையதளம் மற்றும் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

   

இந்நிலையில் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கவும், தேர்தல் நாளன்று ஏற்படும் சிரமங்களைத் தடுக்கவும் தகுதியுள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.