BREAKING: தேர்தல் கூட்டணி.. விஜய் எடுத்த புதிய முடிவு… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணி மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்திய கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஜயை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கான ஆதரவு யாருடன் கூட்டணி என்பது குறித்து சர்வே நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதில் வாக்காளர்களின் மனநிலை, சாதி செல்வாக்கு, இளைஞர்களின் ஆதரவு, அரசியல் கட்சிகளின் தற்போதைய பிம்மம் ஆகிய முக்கிய விஷயங்கள் இடம்பெற உள்ளன. ஒரு மாதத்திற்குள் இதனை முடித்துவிட்டு கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளாராம். அதிமுக – TVK கூட்டணி அமைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த புதிய முடிவை எடுத்துள்ளாராம்.