பெற்றோர் என்றும் பாராமல்… காதலனுடன் சேர்ந்து பெற்ற தாய், தந்தை, தங்கையை துடிதுடிக்க கொன்ற மூத்த மகள்… புதுவையில் கைது… பகீர் பின்னணி…!!

Spread the love

பெங்களூரில் பெற்றோர் மற்றும் தங்கையை இளம் பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கணினி பொறியாளர் சோமசுந்தரம் (52), அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களது மகள்கள் ஸ்வேதா (24), சுப்ரியா (19) ஆகியோர் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் வசித்து வந்தனர். இதில் மூத்த மகள் ஸ்வேதாவும் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் வீட்டிற்கு வராததால், பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக அந்த குடியிருப்புக்குச் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பெற்றோருக்கு, ஸ்வேதா தனது ஆண் நண்பரான கென்னத் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ்-இன்’ உறவில் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதனை சோமசுந்தரமும் முத்துலட்சுமியும் கண்டித்ததால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரும் சேர்ந்து, பெற்றோர் என்றும் பாராமல் சோமசுந்தரம் மற்றும் முத்துலட்சுமியை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். அதனைத் தடுக்க வந்த தங்கை சுப்ரியாவையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. இக்கோரத் தாக்குதலில் முத்துலட்சுமியும் சுப்ரியாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் தப்பி ஓடி உயிருக்கு போராடிய சோமசுந்தரமும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை சம்பவத்திற்குப் பிறகு ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து பெங்களூரு போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒரு பிரியாணி கடை அருகே நின்றுகொண்டிருந்த ஸ்வேதாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, புதுவைக்கு விரைந்த பெங்களூர் கே.எஸ்புரம் போலீசார் ஸ்வேதாவை முறைப்படி கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது காதலன் கென்னத்தை போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago