ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பி. சாவித்ரி டோரா என்ற ஏழை விதவை மூதாட்டி வசித்து வந்தார். தனது அன்றாட வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் வழங்கும் ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியத்தையும், இலவச அரிசியையும் மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வராததால் ஏற்பட்ட கடுமையான வறுமை மற்றும் மன உளைச்சல் காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.49 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியமின்றித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூதாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து, உடனடியாக ஓய்வூதியம் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி மூதாட்டியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இப்பிரச்சினை குறித்துப் பேசிய அமைச்சர் நித்யானந்த கோண்ட், இணையதளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுகளாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினை மிக விரைவில் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு அனைவருக்கும் ஓய்வூதியம் உடனே கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ராய் பரேலியின் உச்சஹார் தெஹ்சிலுக்கு உட்பட்ட உத்வா கிராமத்தைச் சேர்ந்த குன்வர் மோஹித் சிங்கின் மனைவி ரித்திமா சிங், தனது…
பாகிஸ்தானின் லாகூரில் வேலை பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு பெண்ணையும் அவரது மாற்றுத்திறனாளி மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய…
கேரள மாநிலம் பரப்பனங்காடி அருகே உள்ள கரிங்கல்லத்தானி பகுதியில் அதிவேகமாக வந்த செடான் கார் ஒன்று, வளைவில் திடீரெனக் கட்டுப்பாட்டை…
பீகாரில் அரசுப் பணியில் உள்ள பொறியாளர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.…
கென்யாவின் நைரோபி அருகேயுள்ள டண்டோரா பகுதியில், தனது எட்டு வயது மகளுக்கு அறுவை சிகிச்சை பிளேடைக் கொண்டு கொடூரமான முறையில்…
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், பஸ்ரா மற்றும் தத்வாய் இடையே உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே பயங்கர விபத்து…