உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில், சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுராவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது காரில் வெளியே சென்றார்.
அப்போது சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் வெளியே வர முடியாமல் முதியவர் தவித்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
