டாஸ்மாக்கில் பரபரப்பு..! ₹10 ஸ்டிக்கர் கட்டண மோதலில் டாஸ்மாக் ஊழியரை செருப்பால் அடித்த முதியவர்… வைரல் வீடியோ..!!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

சேலம் பூலாவரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 10 ரூபாய் ஸ்டிக்கர் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவருக்கும், கடைக்கு வந்த முதியவர் ஒருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த அந்த முதியவர், எதிர்பாராதவிதமாகத் தனது செருப்பைக் கழற்றி டாஸ்மாக் ஊழியரைத் தாக்கியுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார், வைரலாகும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.