இந்த மனசு யாருக்கு வரும்….? சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்ச பணப் பை…. முதியவர் செய்த துரிதமான செயல்….!!!

Spread the love

திருவாரூரை சேர்ந்த பார்த்திபன், ரூ. 1.25 லட்சத்தை தனது இரு சக்கர வாகனத்தில்  கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்புகையில் மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலை அருகே பணம் வைத்திருந்த பை கீழே தவறி விழுந்துள்ளது. அதனை அறியாத பார்த்திபன் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது, பணப்பையை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார். மேலும் வந்த வழியில் தேடிப் பார்த்த பொழுது, பணப்பை கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் என்ற முதியவர், சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ரோட்டில் பை கிடந்ததை கவனித்துள்ளார். மேலும் அந்தப் பையை எடுத்து பார்த்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததை கூறி பணத்தை ஒப்படைத்தார். கண்ணதாசனின் செயலுக்கு அங்கிருந்த காவலர்கள் பெரும் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அந்தத் தொகையை பார்த்திபனை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும் இத்தகைய செயலை செய்த முதியவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Divyamayakannan

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

6 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

6 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

7 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

7 மணத்தியாலங்கள் ago