கொலம்பியாவின் சான்டாண்டர் பகுதியில் உள்ள பிஞ்சோட் என்ற இடத்தில், ‘சான் கில் – சொக்கோரோ’ சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீரகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த பவுலா கர்லி கோகா முர்சியா (23) என்ற இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சாட்சிகளின் கூற்றுப்படி, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, “அவள் எனக்குச் சொந்தமில்லை என்றால், வேறு யாருக்கும் சொந்தமாக இருக்கக்கூடாது” என்று கூறியவாறு அந்த முதியவர் பவுலாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
https://twitter.com/ColombiaOscura/status/2117688313913942348/video/1
தாக்குதலுக்குப் பிறகு, பலத்த காயமடைந்த பவுலா உடனடியாக சான் கில்லில் உள்ள ‘சாண்டா குரூஸ் டி லா லோமா’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், காயங்களின் காரணமாகச் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
