கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய வினோதினி. இவர் தனியார்க் கடையில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு நெய் விற்பனை பிரதிநிதியாக வந்த 34 வயதுடைய மோகன்ராஜ் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17 அன்று, வினோதினியின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்தபோது, பள்ளி முடிந்து வந்த வினோதினியின் 17 வயதுத் தங்கை தர்ஷினி இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பெற்றோரிடம் கூறப் போவதாகக் கூச்சலிட்டுள்ளார்.
அப்போது மோகன்ராஜ் தாக்கவே, அருகிலிருந்த பிரிட்ஜில் தலை மோதி தர்ஷினி மயக்கமடைந்துள்ளார். சம்பவம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், அக்காவும் கள்ளக்காதலனும் இணைந்து தர்ஷினியின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காமதேனு நகர் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் வீசியுள்ளனர்.
மகள் காணாமல் போனது குறித்து தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், வினோதினி எதுவும் தெரியாதது போல் தங்கையைத் தேடும் நாடகமாடியுள்ளார். காவல்துறையினர் செல்போன் எண்களைக் கண்காணித்தபோது வினோதினிக்கும் மோகன்ராஜுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மீது சந்தேகம் எழுந்து மோகன்ராஜைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் உண்மை தெரியவர, கொலை நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு சாக்கடைக் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் தர்ஷினியின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…
மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…