திக்.. திக்..! 1 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை… இளைஞரை துடிதுடிக்க வெட்டிச் சாய்த்த அண்ணன்கள்… நடுரோட்டில் வெறிச்செயல்…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தனது விருப்பத்திற்குரிய பெண்ணை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டவர் ஜக்ஜீத் சிங். இத்திருமணத்தை அப்பெண்ணின் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், பெண்ணின் அண்ணன்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் பழிவாங்கும் நோக்கில் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஜக்ஜீத் சிங்கை அவ்விருவரும் எதிர்பாராத விதமாகக் கத்தியால் கொடூரமாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள சகோதரர்கள் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பக் கௌரவத்தின் பெயரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆணவக் கொலையாக இது இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.