அதிகாலையிலையே பயங்கர விபத்து… 700 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

நேபாளத்தின் கர்ணாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் ஒன்று 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிவேகமாக சென்றதை விபத்துக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்கு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.