தங்கத்தைப் போலவே முட்டையின் விலையும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு முட்டையின் விலை ரூ.6.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஐந்து காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில்லறை விலையில் ஒரு முட்டை 8 ரூபாய் வரை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இந்தச் செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
