கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்.. மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் தானம்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (பிப்.3) இரவு உயிரிழந்தார்.

கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்த இவரது உடல், அவரது விருப்பப்படி மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இவரது மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.