Categories: சினிமா

‘காதலன்’ படத்துக்கு தேசிய விருது கொடுத்தாங்க.. ஏன்டா வாங்குனோம்னு ஆகிடுச்சு.. editor லெனின் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..

Spread the love

பழம்பெரும் இயக்குனர் ஏ பீம்சிங்கின் மகன்களில் ஒருவரான பி லெனின் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் இயக்குனர் வி டி விஜயனோடு இணைந்து எடிட்டராக பணியாற்றிய அவர் பின்னர் தனியாகவும் பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக அறிமுகமானார்.

நாயகன், கீதாஞ்சலி, அஞ்சலி மற்றும் காதலன் ஆகிய படங்களுக்காக தேசிய விருது வாங்கியுள்ளார். இந்நிலையில் காதலன் திரைப்படத்துக்காக தனக்கு தேசிய விருது கொடுத்தது சம்மந்தமாக ஒரு சுவாரஸ்ய தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு நேர்காணலில் “காதலன் படத்துக்கான எனக்கு தேசிய விருது கொடுத்தார்கள். நானும் வாங்கி வந்துவிட்டேன். அதன் பிறகுதான் எனக்கு ஏன் தேசிய விருது கொடுத்தார்கள் என்பது பற்றி தெரியவந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற முக்காலா பாடலில் பிரபுதேவா நடனமாடும் போது, அவரின் கை, கால், கழுத்து எல்லாம் இல்லாமல் ஆடுவது போன்று காட்சிகள் இருக்கும். இது அப்போது மிகவும் ஆச்சர்யமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

அந்த காட்சிகளை சிறப்பாக எடிட் செய்தததால்தான் உங்களுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது எனக் கூறினர். அப்போதுதான் எனக்கு அதிர்ச்சியானது. ஏனென்றால் அந்த மேஜிக் எல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பண்ணப்பட்டது. அது தெரியாமல் எனக்கு தேசிய விருது கொடுத்தார்கள் என்பதால் எனக்கு அந்த விருதை திருப்பித் தந்துவிடலாமா என்று கூட தோன்றியது” எனக் கூறியுள்ளார்.

காதலன் திரைப்படத்தின் போதுதான் கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் இந்தியாவில் அறிமுகமான காலகட்டம். அப்போது அதைப் பற்றிய அறிவு பலருக்கும் தெரியாமல் இருந்தது. அதனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கும் எடிட்டிங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் காதலன் படத்தில் தேசிய விருது லெனினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

vinoth

Recent Posts

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

9 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

20 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

20 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

29 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

40 minutes ago

BREAKING: நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார்…. கண்ணீரில் திரையுலகம்…!!

பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…

48 minutes ago