தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு இந்த முறையும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்ட ஒரு பக்கம் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு நடுவே விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் பயணித்து மக்களுக்கு புதிய ஆட்சியை தர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றார்.
இதனிடையே பாமகவில் தொடர்ந்து அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் நிலவிக் கொண்டிருக்க தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுக்கு அன்புமணி நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு, கூட்டணிக்கு தயார், ஆனால் பாமக உள் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று அன்புமணி கூறியுள்ளார். ஒன்றிணைந்த பாமக உடன் தான் கூட்டணி பேச்சு வார்த்தை என இபிஎஸ் கறார் காட்டும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தன் தரப்பு காண அங்கீகாரம் என நினைக்கிறாராம். தந்தையை பலவீனப்படுத்த மகன் கையில் எடுத்த வியூகம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
