2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டாலின், எடப்பாடி என இருவரும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு. ஸ்டாலின் அவர்களே… நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் , ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா? “சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே… உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று தானே நான் கேட்டேன்?
உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி: அதற்கு என்ன பதில் சொல்வீங்க? ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது? பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா? -2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே? -அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி.
தமிழ்நாடு மறக்குமா?: -2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி. -புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக. -2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி. -2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக. -2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை. -ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி. -2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு “எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை” ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுமுறைப் பயணமாகச் சீனா சென்றபோது, பெய்ஜிங் விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது எடுக்கப்பட்ட…
பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் ஜாதக அமைப்புகள் குறித்து வெளியிட்டிருக்கும் கணிப்புகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கால அவகாசம் தேவை…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், போதை பழக்கத்தால் விளைந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையத்தில், லாரி ஓட்டுநரான தங்கராஜ் என்பவர் தனது மனைவி அமுதாவால் கொடூரமாகக் கொலை…
நடிகை ஓவியாவின் இந்த அதிரடிப் பதிவு கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்யின் நிழலாகச்…