புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டு சேலை… இபிஎஸ்-ன் அனல் பறக்கும் தேர்தல் வாக்குறுதி…!

By Divyamayakannan on ஆவணி 21, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது .இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன . இதனிடையே  மக்களைக் காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்று இ.பி.எஸ் தமிழகம் முழுவதும்  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். நேற்று ஆகஸ்ட் 20 ராணிப்பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மக்கள் மத்தியில் பேசிய இ.பி.எஸ் . வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற  தேர்தலில் அ.தி.மு.க  ஆட்சிக்கு வந்தால் புதுமணத் தம்பதிகளுக்கு இலவசப்பட்டு வேட்டி , பட்டுச்சேலை வழங்கப்படும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் லேப்டாப் திட்டத்தை நிறுத்திய ஸ்டாலின் அரசு, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாயிலிருந்து வரும் அனைத்து வார்த்தைகளும் பொய்கள் மட்டுமே. வருகின்ற 2026 ஆம் நடக்கப் போகும் சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வரப்போகின்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு புது சேலைகளும், மற்றும் தாலிக்கு தங்கத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  திமுகவின் 51 மாத ஆட்சியில் கிராமம் முழுவதும் ஏன் நகரம் வரை போதை விற்பனை அதிகமாகி கொண்டே வருகிறது.

   

போதை பழக்கத்தினால் பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது. இது மட்டும் இல்லாமல் போதை ஆசாமிகள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 மாதத்தில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளது. ஏன் கடந்த 18 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 63 கொலைகள் நடந்திருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால் கடந்த 51 மாதத்தில் திமுகவின் சாதனைகள் எத்தனை நடைமுறைக்கு வந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடித்திருந்த படத்தில் எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டுவிட்டு போகிறார். மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை மகனின் படத்தில் எவ்வளவு வருமானம் வந்துள்ளது என்று சிந்திக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை ஸ்டாலின் திட்டத்தில் கொடுக்கப்பட்டது.

   

தி.மு.க,  கடந்த 28 மாதங்களாக திமுக என்ன பண்ணிக் கொண்டிருந்தது, தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது . இப்போது மகளிர் தொகை கொடுக்க காரணம் மக்களின் வறுமையைப் பார்த்து அல்ல, தேர்தலுக்கு ஓட்டை பிடிக்கிறார் போல. அதிமுக ஆட்சியில் இருந்தபோது அம்மா மிக்ஸி, ஃபேன் , பள்ளி சீருடை, புத்தகம், லேப்டாப் இது போன்ற நிறைய திட்டங்களை கொடுத்துள்ளோம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டங்கள் அனைத்தையும் தொடரலாம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இது போன்ற பல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தன் உரையை முடித்துக் கொண்டார்.