“நான் செத்து மண்ணுக்குப் போகத் தயார்.. ஆனால்..” – மேடையிலேயே உருகிய முதல்வர்… எடப்பாடிக்கு ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தனிநபர் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான பதிலடியைத் தந்துள்ளார். தஞ்சையை திமுகவின் “வாக்குக் களஞ்சியம்” என்று வர்ணித்த அவர், எடப்பாடி பழனிசாமி டெல்லியின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைக்கத் துடிப்பதாகவும், அதற்குத் தடையாகத் தான் இருப்பதாலேயே தன் மீது வன்மத்தைக் கக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் கொளத்தூர் தொகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர், “பிறக்கும் அனைவரும் ஒருநாள் இறப்பது இயற்கை; அது ஸ்டாலினுக்கும் பொருந்தும். ஆனால், எடப்பாடி பழனிசாமி விரும்புவது போல நான் மண்ணுக்குப் போனாலும், நான் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அந்தத் திட்டங்களால் பயன்பெற்ற மக்களின் இதயங்களில் நான் என்றும் வாழ்வேன்” என உருக்கமாகப் பேசினார்.

   

மேலும் தனது பேச்சில், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் மாநில உரிமைகளையும் காக்கத் தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்பதை முதல்வர் உறுதிபடத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் தெரிவது வெறும் அரசியல் அல்ல, அது அவரது ஆழ்மன வக்கிரம் என்று சாடிய ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும், ஆணவப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.

   

நிறைவாக, “தலைசிறந்த மற்றும் தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க எனது இறுதி மூச்சு இருக்கும் வரை ஓயாமல் உழைப்பேன். எனது சக்தியையும் மீறி உழைக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று முதல்வர் சூளுரைத்தார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் பழனிசாமியின் அரசியல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த அனல் பறக்கும் பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.