தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்ததில் இருந்தே ஆளுங்கட்சியைச் சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது. அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வரும் சூழலே நிலவுகிறது. சட்டப்பேரவையில் தனது பலத்தை மேலும் அதிகப்படுத்தி, யாருடைய கூட்டணியையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற வலுவான நிலையை எட்ட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அதிமுகவிலுள்ள முக்கியப் புள்ளிகளைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் தவெக தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை பிரதான எதிரியாகக் கருதி களம் இறங்கிய விஜய்க்கு, அதிமுக 47 தொகுதிகளைக் கைப்பற்றியது ஒரு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட தவெக, ஆட்சியில் இல்லாத கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் அதிமுகவின் முதுகெலும்பை உடைக்க இப்போது வலையை விரித்துள்ளது. மரகதம் குமரவேல், சத்யபாமா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தவெக பக்கம் சாய்ந்துவிட்டனர். தற்போது, கே.சி. வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, எஸ்.எம். சுகுமார் போன்ற முக்கியப் புள்ளிகளும் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகக் கசியும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் சவாலாக மாறியுள்ளன.
ஆட்சியில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருந்தால்தான் தொகுதிக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும் என்ற யதார்த்தத்தை அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உணர்ந்துவிட்டதே இந்தத் தாவல்களுக்கு முக்கியக் காரணம். எடப்பாடி பழனிசாமி தனது எதிர்க்கட்சித் தலைவர் இருப்பைத் தக்கவைக்கப் போராடினாலும், அடிமட்டத் தொண்டர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் தவெக பக்கம் ஈர்க்கப்படுவது அதிமுகவின் பிடிமானத்தைத் தளர்த்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் மூத்த தலைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும், இளைஞர்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்காததும் தொண்டர்களை தவெகவின் பக்கம் தள்ளியிருக்கிறது. தகுதி நீக்கம் என்ற ஆயுதம் பலன் அளிக்காத நிலையில், கட்சிப் பொறுப்பாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் அடுத்த ஐந்தாண்டுகளைப் பதவியுடன் கழிக்க விரும்புவது எடப்பாடிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “அதிமுகதான் தவெகவின் தாய்க் கழகம்” என்று விடுக்கும் அழைப்பு, அந்தக் கட்சியை உள்ளிருந்தே சிதைக்கும் ஒரு அரசியல் தந்திரமாகப் பார்க்கப்படுகிறது. சோதனையான காலத்தில் கைக்காசை போட்டுச் செலவு செய்த முன்னாள் அமைச்சர்களுக்கு, அரசு ஒப்பந்தங்கள் முதல் பதவிகள் வரை சலுகைகளைத் தவெக தரப்பு காட்டும் போது, அது ஒரு கட்டத்தில் “அதிமுக – தவெக” இணைப்பு என்ற நிலையை எட்டிவிடும் அபாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்த தேர்தலில் சுமார் 1 கோடியே 4 லட்சம் வாக்குகளைப் பெற்ற அதிமுகவிற்கு இன்னும் அடிமட்டத்தில் வலுவான ஆதரவு இருந்தாலும், தவெகவின் இந்த “இழுக்கும்” அரசியல் தொடர்ந்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறி, அடுத்த சில வருடங்களில் தமிழக அரசியல் என்பது “தவெக Vs திமுக” என்ற நேர்க்கோட்டில் பயணிக்கக்கூடும்.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…