மீண்டும் ADMK வில் இணைந்த வேலுமணி தரப்பு.. “இதை செய்யக்கூடாது” அடுத்த நொடியே செக் வைத்த எடப்பாடி..!!

Spread the love

அதிமுக பொது உறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் பழைய பொறுப்புகளைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளால் எழுந்த உட்கட்சி மோதல்களுக்குப் பிறகு, கட்சியில் மீண்டும் இணைந்த நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இபிஎஸ்-க்கு எதிராக அதிருப்தி அணியைத் திரட்டினர். இந்த அணியினர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், அதிருப்தியாளர்களின் கட்சிப் பொறுப்புகளை இபிஎஸ் அதிரடியாகப் பறித்தார். இதனால் வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தவெக-வுக்குத் தாவிய நிலையில், மற்ற ஐந்து எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பழனிசாமி அணியிடமே திரும்பினர்.

இதன் விளைவாக வலுவிழந்த வேலுமணி தரப்பு, பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இறுதியாக இரு தரப்பும் ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற கொள்கை அடிப்படையில் சமரசம் செய்துகொண்டு மீண்டும் ஒன்றாக இணைந்தனர். இந்த இணைப்பைத் தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும், நீக்கப்பட்டவர்கள் தங்களின் பழைய கட்சிப் பதவிகளின் பெயர்களை எங்கும் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என இபிஎஸ் தற்போது தடை விதித்துள்ளார்

Soundarya

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

19 seconds ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

3 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

12 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

19 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

24 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

37 minutes ago