தொடரும் பரபரப்பு… பதவியை பறித்த எடப்பாடி… வேலையைக் காட்டிய செங்கோட்டையன்… அதிமுகவில் அடுத்த பூகம்பம்…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் சமீப காலமாகவே மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிப்பில் ஈடுபட்டது மிகப்பெரிய கவனத்தை பெற்றது. இந்த விஷயத்திற்கு பிறகு செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியாமல் அதிமுக தலைமையும் அமைதி காத்திருந்தது.

இதனிடையே இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மரியாதை செலுத்த வந்திருந்த நிலையில் அங்கு செங்கோட்டையன் அவர்களை சந்தித்து பேசியது புதிய பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம் எனவும் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் அவருக்கு எந்த ஒரு அதிகாரம் இல்லை எனவும் டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் உட்பட அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

   

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் செங்கோட்டையனின் அலுவலகத்தில் அதிமுக போஸ்டரில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் முகம் மறைக்கப்பட்ட அதில் ஜெயலலிதாவின் படம் கூடுதலாக ஒட்டப்பட்டுள்ளது. கோவையில் விவசாயிகள் முன்னெடுத்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லை என்று செங்கோட்டையன் எதிர்ப்பு தொடங்கி இன்று அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.