அம்மா வளர்த்த பிள்ளைங்க நாங்க… இனி அண்ணன், தம்பியா இருப்போம்… இபிஎஸ்+டிடிவி கூட்டாக பேட்டி…!!

Spread the love

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், திமுக ஆட்சியை வீழ்த்துவதை ஒற்றை இலக்காகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி (EPS), டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று  கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன், தங்களுக்கு இடையே கடந்த காலங்களில் மனஸ்தாபங்கள் இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் தற்போது மக்கள் நலன் கருதி திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 2017-ல் தாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாகப் பழகியது போலவே தற்போதும் தொடர்வோம் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுடனான பழைய கசப்பான சம்பவங்களையும், கருத்து வேறுபாடுகளையும் முழுமையாக மறந்துவிட்டதாகக் கூறினார். “நானும், டிடிவி தினகரனும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள்” என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் பழைய நிகழ்வுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, திமுகவை எதிர்க்க ஓரணியில் திரள வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த முக்கியத் தலைவர்களின் திடீர் இணைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

29 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

31 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

41 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

42 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

57 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago